நோயின் அறிகுறியை நகங்களின் மூலம் கண்டறியலாம்.


நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கின்றன. நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்புவீர்களா? ஆனால் இவை உண்மை தான். 

வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.
நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் 'மொனிட்டர்' போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.

நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் பின்வருமாறு:

1. நகங்கள் உடைசலாக வளர்கிறதா? மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினை, தைராய்ட் நோய் போன்றவற்றின் அறிகுறியாகவும் இது கருதப்படுகிறது.

2. நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் நுரையீரல் நோய்கள் வரலாம்.

3. மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி ஏற்படும்.

4. நகங்கள் வெளிறி இருந்தால் இரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.

5. நகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம்.

6. கீறல்- குழிகள் விழுந்தால் சரும பிரச்சினைகளின் அறிகுறி.

7. நீலநிறமாக மாறிவிட்டால் இரத்தத்தில் ஒக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதயநோய்களைக் கொண்டு வரலாம்.

8. நகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கருமை நிறமாக காணப்பட்டால் இரும்புச்சத்து, விட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.

9. மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.

விரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துப் பராமரிப்பது உடல் நலத்துக்கு நல்லது.

Post a Comment

0 Comments