Blue Screen Error - இரண்டாம் பாகம் [ நிறைவு ]

இந்த பதிவு முதற் பாகத்தின் தொடர்ச்சி ஆகும் .
நாம் கடைசி பதிவில் பார்த்தது , நம் கணிப்பொறியை தற்காலிகமாக ஒரு இயக்க நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கும் .
ஆனால் அதில் நாம் இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர்கள் , செட்டிங்குகள் போன்றவற்றை கான இயலாது . அதை மீட்கும் முயற்சியைதான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம் .
நாம் இதில் நம்முடைய சிஸ்டத்தை இதற்கு முந்தைய நிலைக்கு ரீஸ்டோர் செய்யப்போகிறோம் .
நாம் எல்லோருமே ‘மைக்ரோஸாப்ட் சிஸ்டம் ரீஸ்டோர் ‘ யுட்டிலிட்டியை உபயோகிப்பதில்லை . துரதிருஸ்ட வசமாக ,அந்த யுட்டிலிட்டியில் நாமாக போய் ரீஸ்டோர் பாயின்டை செட் செய்திருக்க வேண்டும் .இல்லையெனில் அதை உபயோகிப்பதில் பயனில்லை .
ஆனால் அது நமக்கு தெரியாமல் நாம் சிஸ்டத்தை ஸ்டார்ட் செய்யும் பொழுதெல்லாம் செட்டிங்குகளை பேக்கப் எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் .என்ன .. அந்த செட்டிங்குகள் இருக்கும் பைல்களை தான் இப்பொழுது நாம் நோண்டப்போகிறோம் .
முதலில் அந்த பைல்களை அனுகுவதுஎப்படிஎன்று பார்ப்போம் .
1) வின்டோஸ்எக்ஸ்புளோரரை ஸ்டார்ட் செய்துகொள்ளுங்கள்
2) டூல்ஸ் -> போல்டர் ஆப்ஷன்ஸ் தேர்வு செய்யுங்கள் .
3) வியூ டேபை தேர்வு செய்யுங்கள்
4) ஹிடன் பைல்ஸ் அன்ட் போல்டர்ஸ் க்கு கீழே “Show hidden files and folders ” தேர்வு செய்யவும் ( செக் பாக்ஸில் டிக் செய்யவும் )
5) அதிலேயே கீழே “Hide protected operating system files (Recommended)” செக் பாக்ஸில் உள்ள செக் மார்க்கை எடுக்கவும் [ டீ செலக்ட் ]
6) இப்போது தோன்றும் டயலாக் பாக்ஸில் “யெஸ்” சொல்லுங்கள் .
7) நீங்கள் வின்டோசை இன்ஸ்டால் செய்திருக்கும் டிரைவுக்குள் செல்லுங்கள் .
இங்கே தான் அந்த அதிக பாதுகாப்புடன் மறைக்கப்பட்ட பேக்கப்புகள் உள்ள ‘system volume information’ போல்டர் மங்கலாக தெரியும் .
நீங்கள் பேட் 32 டிரைவ் வைத்திருந்தீர்களென்றால் அந்த போல்டரை டபுள் கிளிக் செய்தால் உள்ளே போய்விடும் ,” என் டி எப் எஸ் ” டிரைவ் வைத்திருப்பவர்களை உள்ளே வின்டோஸ் உள்ளே விடாது [ " என் டி எப் எஸ் " இன் உருப்படியான பயன்களில் இதுவும் ஒன்று ] .
ஆகவே அந்த பொல்டரை ரைட் கிளிக் செய்து “ஷேரிங் அன்ட் செக்யூரிட்டி” தேர்வு செய்து பின்னர் செக்யூரிட்டி டேபை தேர்வு செய்யுங்கள் .

செக்யூரிட்டி டேப் அங்கே இல்லைஎன்பவர்கள் பின் வரும் வழிகளை பின்பற்றவும்
1) டூல்ஸ் – > போல்டர் ஆப்ஷன்ஸ் -> வியூ [டேப் ] கொடுக்கவும்
2) அதில் உள்ள மெனுவில் கடைசி வரை ஸ்க்ரோல் செய்தால் கடைசியில் “யூஸ் சிம்பிள் பைல் ஷேரிங் அன்ட் செக்யூரிட்டி “என்றொரு ஐட்டம் செக்காகி இருக்கும் , அதை அன்செக் செய்யுங்கள் , வரும் வார்னிங்கை ஓகே சொல்லுங்கள் .

இப்பொழுது செக்யூரிட்டி டேபில் “ADD” என்றிருக்கும் பட்டனி கிளிக் செய்து அதில் “Enter the object names to select “என்றிருக்கும் பாக்ஸில் உங்கள் யூசர் நேமை [கவனம் தேவை] டைப் செய்யவும் .
இப்போது அநேகமாக அந்த போல்டர் உங்களுக்கு திறக்கப்பட்டிருக்கும் .எல்லா பாக்ஸிற்க்கும் ஓகே கொடுத்து எக்ஸ்புளோரரில் அந்த போல்டரை திறக்கவும் .

முதலில் டிச்பிளே செட்டிங்கை டீடெய்ல்ட் வியூவிற்க்கு மாற்றிக்கொள்ளுங்கள் . அதில் தெரியப்போகும் டைம் ஸ்டாம்புகள் நமக்கு தேவை .
இங்கே ““_restore{87BD3667-3246-476B-923F-F86E30B3E7F8}” போன்ற பெயர்களில் பல போல்டர்கள் இருக்கும் .
அதில் தற்போதைய நேரத்தில் உருவாகியுள்ளாத ஒரு போல்டரை திறக்கவும் .
இந்த சப் போல்டரில் “RP ***”என்ற பெயரில் பல போல்டர்கள் இருக்கும் . “RP”என்பது ரீஸ்டோர் பாயின்டை குறிக்கும் .
இதிலும் தற்போதைய நேரத்தில் உருவாகியுள்ளாத ஒரு போல்டரை திறக்கவும் .
அதற்க்குள் மேலும் ஸ்நாப்ஷாட் சப் போல்டர்களை திறக்கவும் .
உதாரணத்திற்க்கு : C:\System Volume Information\_restore{D86480E3-73EF-47BC-A0EB-A81BE6EE3ED8}RP1Snapshot
அதிலிருந்து கீழ் கண்ட பைல்களை , நாம் முதல் பதிவில் பார்த்த டெம்பிரரி போல்டருக்கு காபி செய்யவும் .
_registry_user_.default
_registry_machine_security
_registry_machine_software
_registry_machine_system
_registry_machine_sam
இப்போது கணினியை ரீஸ்டார்ட் செய்யவும் . [ சிடி இன்னும் உள்ளேதான் இருக்கிறதுஎன்று உறுதி படுத்திக்கொள்ளவும் ]
ரெக்கவரி கண்சோலுக்குள் நுழையுங்கள் . முதற் பதிவில் சொன்னபடி கமான்ட் பிராம்ப்ட் வரை செல்லுங்கள் .
இப்போது கீழ்கண்ட கமான்டுகளை டைப் செய்யுங்கள் .
Del c:\windows\system32\config\sam
Del c:\windows\system32\config\security
Del c:\windows\system32\config\software
Del c:\windows\system32\config\default
Del c:\windows\system32\config\system
copy c:\windows\tmp\_registry_machine_software c:\windows\system32\config\software
copy c:\windows\tmp\_registry_machine_system c:\windows\system32\config\system
copy c:\windows\tmp\_registry_machine_sam c:\windows\system32\config\sam
copy c:\windows\tmp\_registry_machine_security c:\windows\system32\config\security
copy c:\windows\tmp\_registry_user_.default c:\windows\system32\config\default
[ முதல் பதிவு , டிரைவ் லெட்டர் முக்கியம் நண்பரே , கூடவே சின்டாக்ஸும் ]
இப்போது “exit” என்று டைப் செய்து , சிடியை வெளியில் எடுத்து விட்டு ,ரீஸ்டார்ட் செய்தால் கணிப்பொறி பழைய நிலைக்கு ரீஸ்டோர் ஆகியிருக்கும் .
அவ்ளோதான்
இந்த கொடுமையான தமிழாக்கம் புரியாதவர்கள் , ஒரிஜினல் பதிப்பை இங்கே , இங்கே அப்புறம் இங்கே சென்று படித்துக்கொள்ளுங்கள் .

Post a Comment

0 Comments