கணணி செய்தி VLC மீடியா பிளேயரில் யூடியூப் வீடியோவை நேரடியாக இயக்குவதற்கு

வி.எல்.சி மீடியா பிளேயரானது ஓடியோ மற்றும் வீடியோக்களை இயக்க உதவும் அப்ளிகேஷன் ஆகும்.இந்த பிளேயரானது தற்போது அதிகமான கணணி பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணமே இந்த மென்பொருளுடைய எளிமையான தோற்றமும். இலவசம் என்ற ஒன்று மட்டுமே ஆகும்.
வி.எல்.சி மீடியா பிளேயரில் அதிகமான வசதிகள் மறைந்து உள்ளன. அந்த வகையில் மறைந்துள்ள வசதிதான் நேரடியாகவே யூடியூப் வீடியோவை வி.எல்.சி மீடியா பிளேயரில் இயக்கி பார்க்கும் வசதி ஆகும். இதனை செய்ய வி.எல்.சி பிளேயரை ஒப்பன் செய்யவும். பின் Media � Open Network Stream என்பதை தேர்வு செய்யவும்.
தேர்வு செய்யதவுடன் தோன்றும் விண்டோவில் வீடியோவில் URLயை பேஸ்ட் செய்யவும். பின் Play என்னும் பொத்தானை அழுத்தவும்.
இப்போது வீடியோவினை நேரடியாகவே வி.எல்.சி பிளேயரில் காண முடியும். கணணியில் ப்ளாஷ் பிளேயர் இல்லையெனில் வீடியோவினை இணையத்தில் காண முடியாது.
அதுபோன்ற சமயங்களில் இந்த வி.எல்.சி பிளேயர் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும். வீடியோவைவினை மாற்றம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

Post a Comment

0 Comments