வஞ்சித்தது செல் சேவை நிறுவனங்கள்




தொண்டியில் இருந்து அபுபக்கர் எனும் சகோதரர் போன் செய்தார். செல்சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள் 27/9/2011.முதல் கட்டர் கார்டு மூலம் எஸ்.எம்.எஸ். ஆக்க்டிவேட் செய்யப்பட்டுயிருந்தாளும் நாள் ஒன்றுக்கு நூறு எஸ்.எம்.எஸ். க்கு மேல் அனுப்ப முடியாது என்னும் தகவலை சொன்னார்.

நான் ஒரு ஐந்து சிம்கார்டுகள் பணம் கொடுத்து வாங்கினோன். ரிடெயிலர் அவர்கள் நிறுவனத்திற்க்கு நான் கொடுத்த எனது அடயாள அட்டையின் நகல்களைஅவர்களுக்கு அனுப்பவில்லையாம் அதனால் உங்கள் அட்ரஸ் எங்களுக்கு  வந்து சேரவில்லை என்று கூறி இரண்டு நாளில் சேவையை நிறுத்தினார்கள். அதன் பின்பல முயற்ச்சிகளுக்கு பின்னர் என் அடையாள அட்டையின் ஒரிஜினலோடு அதன் நிறுவனத்தின் ஸ்டோருமை அனுகினேன் அவர்களே என் அடையாள அட்டையை நகல் எடுத்துக்கொண்டார்கள்.
(அதன் ஒரு வாரம் சென்று நிறுத்தி விட்டார்கள்)

அதன் பின் ஒரு கால் செய்து என் மனைவியை நலம் விசாரித்தேன் அதன் பின் இரண்டவது கால் வேறொரு நம்பரில் இருந்து என் மனைவின் நம்பருக்கு கால்
வந்திருக்கிறது கால் செய்தவன் வோறொரு நோக்கத்தில் பேசியிருக்கிறான். 

இந்த நம்பரை நான் வேறுயாருக்கும் கொடுக்க வில்லையே அப்படியிருக்கும் போது எப்படி என் நம்பர் அவனுக்கு தெரிந்தது என்று என்னிடம் கேட்டார்.

நான் கால் செய்தவனுக்கு போன் செய்து கேட்டேன் அவன் மனதை மயக்கும் மங்கையின் நம்பர் என்று ஒரு பஸ்ஸில் எழுதியிருந்தது என்று கூலாக சொன்னான் நான் நல்லவன்தான் எனக்கு சபலம் வந்தே கால் செய்தேன் என்றான்.

இந்த நம்பர் எப்படி எனக்கு வந்திதிருக்கும் என்று நன்பர்களிடம் கேட்டேன். ஏற்க்கனவே வேறொரு நபரின் பெயரில் இந்த நம்பர் இருந்து இருக்கும் அவர்கள் பயன்படுத்தாமல் விட்டு விட்டால் அந்த நம்பர்களை வேறொரு நபருக்கு செவைசெய்யும்? நிறுவனம் வழங்கிவிடுவார்கள். என்றனர்.

நாள் ஒன்றுக்கு எனது நம்பருக்கு செல் போன் சேவை நிறுவனம் அனுப்பிய எஸ்.எம்.எஸ். மட்டுமே இருவதை தாண்டி இருக்கும். நானும் எவளவோ பணத்தை இவர்களின் குளறுபடியால் இளந்து இருக்கிறேன்

ஒரு மாதமாக கஸ்டமர் கேரை தொடர்பு கொள்ள முடியவில்லை நந்தனம் பகுதியில் எந்த நெட்வொர்க்கும் சரியில்லை. START DND / START 0 எது அனுப்பினாலும் செல்போன் என்னிடமிருந்து பணம் எடுப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை நேற்று *234*337# க்கு ரிப்லே செய்தேன் உங்களுக்கு வெற்றிகரமாக மியூஸிக் ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது என்று கூறி என்னிடமிருந்து 10 ரூபாயை எடுத்துக்கொண்டார்கள். சரி எதவது ஒரு மியூஸிக் ஆக்டிவேட் ஆகியிருக்கும் என்று பார்த்தால் எந்த மியூஸிக்கும் ஆக்டிவேட் ஆகவில்லை. அப்போ என் பணம்?.

சரி விசயத்துக்கு வருவோம். ஒவ்வொறு நாளும் எஸ்.எம்.எஸ். மூலம் சாமனிய மக்களை சந்தித்து வந்த அவன் பகிர்ந்து கொண்ட விசயங்கள் அனைத்திற்க்கும் செல்போன் சேவை நிறுவனங்கள் மூடு விழா நடத்தியிருக்கிறது நாள் ஒன்றுக்கு 100.எஸ்.எம்.எஸ். தான் அனுப்ப முடியும் என்று வரையரை செய்வது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும். தகவல் துறையில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுவரும் நமது நாட்டில் இது பொன்ற நடவடிக்கைகள் சமுக பின்னடைவேயே ஏற்ப்படுத்தும்.

பல்லாயிரம் கோடி ஊளல் செய்யமுடிம் என்ற ஒரு துறையில் சாமனிய மக்களை நசுக்கும் இது போன்ற சட்டங்கள் சமுக அரசியல் மாற்றத்தையே உண்டு பன்னும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்க்கு வித்திட்டது தகவல் தொடர்புத்துறையில் நடந்த ஊளலும் ஒரு காரனம் என்பதை மத்தியில் ஆள்பவர்கள் உனரவேண்டும்.

சரி எப்படி சாமனிய மக்களை சந்திக்கலாம் என்றால். தமிழன் கொஞ்சம் விவேகமானவன் அதனால் இதை குறிப்பிடுகிறேன். இண்டெர் நெட் சேவையில் சமுக தளங்களில் தனியிடத்தை பிடித்துயிருக்கும் கூகுல் நிறுவனம் பல்வேறு சேவையை வழங்கி வருகிறது அதில் ஜிமெயில் சேவைகள் இதில் உங்களுக்கு ஒரு மெயில் ஓப்பன் செய்து கொள்ளலாம் அதில் குரூப் உருவாக்கி உங்கள் செல்போனில் ஒபேரா மினி ப்ரவுஸரில் உங்கள் மெயிலில் தமிங்கிலிஸ்ஸில் டைப் செய்து அனுப்பலாம்.

கூகுல் இன்னொரு சேவையாக ப்ளாக் ஸ்பாட்டை கூகுல் தருகிறது. இதில் அனைவரும் பார்க்கும் வசதியுடனும். உங்கள் நன்பர்கள் மட்டுமே பார்க்கும் வசதியுடனும் உருவாக்கம் செய்யமுடியும் இதிலும் உங்கள் கருத்தை பதிக்க முடியும். தெரியதவர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள். சும்ம விளையாட்டாக வடிவமைக்க முடியும்.

அப்படித்தான் இந்த வலைப்பூவை வடிவமைத்தேன். உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி முகவை ஹசன் தனது வலைப்பூவில் இவ்வாறே பதிவிடுகறார். அவரின் வலைப்பூவின் லிங்க் இதோ http://hasansms.blogspot.com/. பிளாக்கர் சம்பந்தமான அனைத்து கட்டுரைகள் கணிணி பற்றிய சந்தேகங்களுக்கு நமது வலையின் லெஃப்ட் பாரில் பார்க்கவும்

ஆறுவருடமாக எஸ்.எம்.எஸ். அனுப்பிவந்த எனது சிம்முக்கு பி.எஸ்.என்.எல். மூடுவிழா நடத்திவிட்டது. (கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு கேட்டேன் தர்ச்சமயம் நாள் ஒண்றுக்கு நூறு தான் உங்கள் கால் கட்டணம் நிமிடத்திற்க்கு 1.20 ஒரு ரூபாய் இறுபது பைசா தான் கட்டணத்தில் மாற்றம் இல்லை என்றார்கள்)
அன்புடன்.ஓ.பி.கலில் ரஹ்மான். எஸ்.பி.பட்டினம்

Post a Comment

0 Comments