கூகிள் தேடலில் உடனடி பதில்கள்


கூகுள் தேடுபொறியை பயன்படுத்தாத இணைய பயனாளர்கள் யாருமில்லை என்று கூட சொல்லலாம். அந்தளவு கூகுள் தேடுபொறி அனைவருக்கும் பயன்படுகிறது. ஒரு சில தேடல்களுக்கு உடனடி முடிவுகளை தருகிறது கூகிள் தளம். அதனை பற்றி இங்கு பார்ப்போம்.

[படங்களை பெரிதாக காண படங்களின் மீது க்ளிக் செய்யவும்]

உலக  நேரம்:

உலக நாடுகளில் தற்போதைய நேரத்தை அறிந்துக் கொள்ள "Time country+name"  என்று தேடவும். உதாரணத்திற்கு "Time India".


வானிலை:

உலகில் உள்ள முக்கிய நகரங்களில் இன்றைய வானிலை நிலவரம் பற்றி அறிய "Weather City+name" என்று தேடவும். உதாரணத்திற்கு "Weather Chennai".


சூரிய உதயம் & சூரிய அஸ்தமனம்:

முக்கிய நகரங்களில் இன்றைய சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றின் நேரத்தை அறிந்துக் கொள்ள "Sunrise City+Name", "Sunset City+Name" என்று தேடவும். உதாரணத்திற்கு, "Sunrise Paris", "Sunset Paris".





கால்குலேட்டர்:

கால்குலேட்டரில் நாம் செய்யும் அனைத்து கணக்குகளையும் கூகிளில் செய்யலாம். உங்களுக்கு தேவையான கணக்கினை தேடவும். உதாரணத்திற்கு "5*9+(sqrt 10)^3".





மக்கள் தொகை:

உலக நாடுகள் மற்றும் முக்கிய ஊர்களின் மக்கள் தொகையை அறிந்துக் கொள்ள "Population City(or)country+name" என்று தேடவும். உதாரணத்திற்கு "Population India"



அகராதி:

ஏதாவது ஒன்றை பற்றிய அகராதி என்னவென்று தேறிய வேண்டுமானால் "define: search+word" என்று தேடவும். உதாரணத்திற்கு "define: parotta".



விமான நிலவரம்:

குறிப்பிட்ட விமானத்தின் புறப்பாடு நேரமும், வருகை நேரமும் அறிய "Flighname FlightNumber". உதாரணத்திற்கு "Emirates 547".


இவையெல்லாம் புதிய வசதிகள் இல்லை. முன்பே அறிமுகமானவைகள் தான். எனக்கு இன்று தான் தெரிந்தது. மேலும் சில வசதிகள் பற்றி இறைவன் நாடினால் பிறகு பார்ப்போம்.

Post a Comment

0 Comments