நீர் இல்லாமல் சத்தத்தை கொண்டு தீயை கட்டுப்படுத்த முடியும்

இசையை கொண்டு தீயை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் விர்ஜினியாவை சேர்ந்த இரு பொறியாளர்கள். லோ-ஃப்ரீக்வன்சி சவுன்டு ஏற்படுத்தும் அலைகளை கொண்டு தீயினை கட்டுப்படுத்த முடியும் என இவர்கள் நிரூபித்துள்ளனர். இந்த ப்ரோடோடைப் எக்ஸ்டிங்யூஷரை கணினி பொறியாளர் மேஜர் வியட் ட்ரியான் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மேஜர் செத் ராபர்ட்சன் இணைந்து தயாரித்துள்ளனர். 
 
நீர் இல்லாமல் சத்தத்தை கொண்டு தீயை கட்டுப்படுத்த முடியும் இந்த தொழில்நுட்பம் முற்றிலும் ஒலியின் மூலம் ஏற்படும் அலைகளை சார்ந்தே இயங்குகின்றது. அதிக ஃப்ரீக்வன்சி இருக்கும் ஒலி தீயை வைப்ரேட் ஆக்கும், அதனால் குறைந்த ஃப்ரீக்வன்சிகளான 30 முதல் 60 ஹெர்ட்ஸ் சரியாக தீயில் இருக்கும் காற்றை திக்குமுக்காடச் செய்யும் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து சவுன்டு ஃப்ரீக்வன்சி ஜெனரேட்டர் ஒன்று தயாரிக்கப்பட்டது, இது ஒலி அலைகளை சீராக வெளியேற்ற உதவும். 
 
இந்த கருவி சாராயத்தை கொண்டு எரியூட்டப்பட்ட சிறிய அளவிளான தீயை கட்டுப்படுத்தியது. தற்சமயம் வீட்டு பயன்பாட்டிற்கு உகந்ததாக இந்த கருவி இருக்கின்றது.

Post a Comment

0 Comments