எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிப்பதனால் ஏற்படும் அபாயங்கள்!!

விளையாட்டு வீரர்களில் இருந்து பெரும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் ஐ.டி. உத்தியோகஸ்தர்கள் வரை எண்ணில் அடங்காதவர்கள் இந்த எனர்ஜி ட்ரிங்க்ஸை தினமும் குடிக்கும் மோகத்தில் திளைத்திருக்கிறார்கள். ஒரு பக்கம் இது உடலுக்கு வேண்டிய எனர்ஜியை தருகிறதென சில பேரும். இன்னொரு பக்கம் இதை வெட்டி ஃபேசனாக கருதி சில பேரும் பருகி வருகின்றனர்.

உண்மையில் இதன் தயாரிப்பு மூலப்பொருட்களில் உடலிற்கு தீங்கான இரசாயனங்களும், அதிகப்படியான செயற்கை சர்க்கரை பொருளும் மற்றும் இரசாயன வண்ண கலவைகளும் தான் பயன்படுத்தப்படுகின்றன. இது, மாரடைப்பு, நரம்பு தளர்ச்சி, டைப் 2 நீரிழிவு நோய் போன்ற பாதிப்புகள் உருவாக ஒரு வகையிலான காரணமாக அமைகிறது.

இது யாவும் ஓரிரு நாட்களில் ஏற்படும் உடல்நல மற்றம் அல்ல, ஒவ்வொரு நாளும் நீங்கள் இதை குடித்து வருவதனால் ஏற்படும் உடல்நல பாதிப்பு ஆகும். கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் உடல்நலத்தை அரித்து உங்கள் உயிர் மரித்துப் போக செய்கிறது. இதோ எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிப்பதனால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்…

மாரடைப்பு

எனர்ஜி ட்ரிங்க்ஸின் இரசாயன கோட்பாடு அனைவரது உடல்நலத்திற்கும் ஒரே மாதிரியான பயனளிக்காது. பலவீனமான இதயம் கொண்டவர்கள் எனர்ஜி ட்ரிங்க்ஸ் பருகுவதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

தீராத தலைவலி

நீங்கள் அதிகமாக எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிப்பவாராக இருப்பின் அடிக்கடி தலைவலி வர வாய்ப்புகள் இருக்கிறது. இதில் கலக்கப்படும் காப்ஃபைன் பொருள் தான் இதற்கான காரணியாக அமைவதாய் கூறப்படுகிறது.

தூக்கமின்மை

எனர்ஜி ட்ரிங்க்ஸ் உடலிற்கு சுறுசுறுப்பை தரவல்லது. ஆனால், இதன் எதிர்வினையை அதிகமாக எனர்ஜி ட்ரிங்க்ஸ் பருகுபவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது.

டைப் 2 நீரிழிவு நோய்

பல எனர்ஜி ட்ரிங்க்ஸ் பானங்களில் செயற்கை சர்க்கரை அளவு சுவையை அதிகப்படுத்துவாதற்காக சேர்க்கப்படுகின்றன. இது கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவை அதிகப்படுத்துகிறது. இதனால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.

நரம்பு தளர்ச்சி

எனர்ஜி ட்ரிங்க்ஸில் கலக்கப்படும் அதிகப்படியான காப்ஃபைன் உங்களுக்கு நடுக்கத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும். நாள் போக்கில் இது நரம்பு தளர்ச்சி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வாந்தி

உடல்நீர் வறட்சி மற்றும் அமில அரிப்பை ஏற்படுத்தும் எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிப்பதனால் வாந்தி ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.
மற்றவை

இது தவிர சுவாசக் கோளாறு, இரைப்பை பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. எனவே, முடிந்த வரை அளவிற்கு அதிகமாய் எனர்ஜி ட்ரிங்க்ஸை பருகுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments