ஆக்டா கோர் பிராசஸர் கொண்ட லெனோவோ பி70 ரூ.15,999க்கு வெளியானது !!!

 
லெனோவோ பி70 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது, இன்று முதல் அந்நிறுவனத்தின் இணையத்தில் முன்பதிவுகள் துவங்கியதோடு இதன் விலை ரூ.15,999 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதத்தில் சீனாவில் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

டூயல் சிம் கொண்ட லெனோவோ பி70 ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்குவதோடு 5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளேவும் கொண்டிருக்கின்றது. 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர், 2ஜிபி ராம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக மெமரியை 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 
 
கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன் பக்க கேமராவும் இருக்கின்றது. இதோடு 4ஜி LTE, 3ஜி, GPRS/ EDGE, Wi-Fi 802.11 b/g/n, GPS/ A-GPS, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் இருக்கின்றது. இதோடு 4000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுவதோடு 3 மணி நேரத்தில் முழு கருவியை சார்ஜ் செய்யும் வசதியும், 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவோ நிறுவனம் சமீபத்தில் டால்பி அட்மோஸ் ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட ஏ7000 ஸ்மார்ட்போனை ரூ.8,999க்கு வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. 4ஜி சேவை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments