ஆப்பிள் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு ஆப்பிள் பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள்

 
ஆப்பிள் நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமாக இருப்பதோடு ஏப்ரல் 1 ஆம் தேதி 1976 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இன்று தன் 38வது பிறந்த நாளை கொண்டாடுகின்றது. கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆப்பிள் நிறுவனம் குறித்து உங்களுக்கு தெரிந்திராத தகவல்களை பாருங்கள்..

01ஆப்பிள் 
ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், ஐபாட், மேக் கருவிகளை தயாரிப்பது அனைவருக்கும் தெரயும்,ஆனால் ஆப்பிள் நிறுவனம் கேமிங் கன்சோல்களை தயாரித்து தோல்வியை தழுவியது பலரும் அறிந்திராத விஷயமே.

02.புகை 
ஆப்பிள் கணினிகளின் அருகில் புகை பிடித்தால் அதன் வாரன்டி நிராகரிக்கப்பட்டு விடும்.

03.ஊழியர்கள் 
டிம் குக் தன் நிறுவனத்தில் சரியாக 92,600 ஊழியர்களை நியமித்தார்.

04.பணம் 
அமெரிக்க கருவூலத்தை விட இரு மடங்கு பணம் ஆப்பிள் நிறுவனம் கையாளுகின்றது.

05.நேரம் 
ஐபோன் விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் புகைப்படங்களை நன்கு கவனித்தால் அவைகளில் நேரம் சரியாக 9.41 என இருக்கும், ஏனெனில் இந்நேரத்தில் தான் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை வெளியிட்டார்.

06.பிலிப்ஸ் 
ஐபாட் ஐபாடை தயாரித்த டோனி ஃபேடெல் முதலில் அந்த கருவியை பிலிப்ஸ் மற்றும் ரியல் நெட்வர்க்ஸ் நிறுவனத்திடம் தான் வழங்க முன்வந்தார், ஆனால் அவர்கள் அதனை நிராகரித்து விட்டனர்.

07.$3 மில்லியன் 
1991 ஆம் ஆண்டு ஐபோன்களை தயாரிக்க உதவும் பாகங்களை வாங்கினால் மொத்தமாக $3மில்லியன் வரை செலவாகும், இதன் ரேம் மட்டும் $1.44 மில்லியன் ஆகும்.

08.ஆப்பிள் 
ஸ்டீவ் ஜாப்ஸ் தனக்கு ஆப்பிள் சாப்பிட பிடிக்கும் என்ற நோக்கில் தான் தன் நிறுவனத்திற்கு அதே பெயரை சூட்டினார்.

09.ஆப்பிள் 
ஆப்பிள் லோகோவை வடிவமைத்த ஜீன் லூயிஸ் கஸீ ஜாப்ஸிடம் இரு மாடல்களை காண்பித்தார் ஆனால் ஜாப்ஸ் கடிக்கப்பட்ட ஆப்பிள் லோகோவை அதிகம் விரும்பினார்.

10.எம்68 
ஐபோனிற்கான குறியீட்டு சொல் தான் எம்68, இதற்கான வேலை துவங்கியது முதல் வெளியான வரை ஆப்பிள் நிறுவனம் முழுக்க எம்68 என்றே அழைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments