உங்களுக்குத் தெரியுமா ! -1


 
டிஜிட்டல் கேமராக்கள் அதிலும் குறிப்பாக மொபைல் போன்களில் டிஜிட்டல் கேமெராக்கள் அதிக அளவு உபயோகத்திற்கு வந்ததிலிருந்து ‘ஆவி, பேய்’ பற்றிய செய்திகள் மற்றும் புரளிகள் குறைந்து விட்டன !?


 
அகொனைட் (Aconite) எனப்படுவது அறியப்பட்ட விஷ வகைகளில் ஒரு  கொடிய விஷமுடைய தாவரமாகும். ஆனால் அதை ஹோமியோபதியில் நோய்தீர்க்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃப்ர் ஸ்டாண்டர்ஸ் அண்ட் டெக்னாலஜி ஒரு அரிசி அளவே உள்ள அணுக்கடிகாரம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். (வீடியோவை பார்க்க இங்கு க்ளிக்கவும்)

 
எவ்வளவு பெரிய காகிதமே ஆனாலும் அதை ஏழு தடவைக்கு மேல் மடிக்க முடியாது !
 
 நாம் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் கியாஸ்ஸுக்கு எவ்வித மணமும் கிடையாது. எதிர்பாரா விதமாக சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக நெடிய நாற்றம் கொடிக்கக்கூடிய ஒரு வேதிப்பொருளை அதனுடன் கலக்கிறார்கள்.

Post a Comment

0 Comments